Friday, November 6, 2009

நானும் எழுதிட்டேன் திடுக்கிடும் உண்மைகள் லிஸ்ட்

என்னையும் ஒரு ப்ளாகரா மதிச்சு அழைத்து சிறப்பித்த முரளிக்கு முதற்கண் பெரிய வணக்கத்தை தெரிவித்துக் கொல்கிறேன் (ஆமா அதே கொல்கிறேன் தான்). பின்னே என்னங்க இந்த மாதிரி வம்புல மாட்டிக்கக் கூடாதுன்னுதான்  கவிதைன்ற பேர்ல எதையோ எழுதி தப்பிச்சுட்டு இருந்தேன். மாட்டி விட்டுடியே பரட்டை. யாரும் ஆட்டோ எல்லாம் அனுப்ப மாட்டாங்களே ?

இந்தப் பதிவோட விதிகள்:

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.


4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.


5. இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும்.
பிடிச்சவங்க : என்னத்த சொல்ல. எனக்கு பிடிச்சவங்கள உங்களுக்கு புடிக்காம இருக்கலாம் உங்களுக்கு பிடிச்சவங்கள எனக்கு பிடிக்காம இருக்கலாம் இல்லை உங்களுக்கு பிடிச்சவங்களையே எனக்கும் பிடிக்கலாம் எனக்கு பிடிச்சவங்களையே உங்களுக்கும் பிடிக்கலாம் (அனு போதும் ஆரம்பத்துலையே உளறத் தொடங்கிட்டே இன்னும் என்ன எல்ல்லாம் எழுதப்போரயோ. கடவுள் விட்ட வழி)

பிடிக்காதவங்க  :இதுக்கு நிறைய காரணங்கள்  இருக்கும் ஆனா சொல்ல மாட்டேனே. ஆளச் சொல்வேன் ஆனாலும்


1.அரசியல் தலைவர்

பிடித்தவர் : ஒரு காலத்துல வை. கோ இப்போ தயாநிதி மாறன்
பிடிக்காதவர்: சொல்லலாமா கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. இருந்தாலும் பிடிக்காதவர் கலைஞர். அவரோட குடும்ப பாசம் பிடிச்சிருந்தாலும் கொஞ்சமாவது மக்களை பத்தியும் யோசிக்கலாம். 


2.எழுத்தாளர்

பிடித்தவர் : எஸ்.ராமகிருஷ்ணன், சுஜாதா (அவர் இறந்தத இன்னும் ஒத்துக்க முடியல அதான் அவர் பேரும்) பாலகுமாரன், சுந்தர ராமசாமி, ராஜேஷ் குமார், படுதலம் சுகுமாரன் 
பிடிக்காதவர் : அனுராதா ரமணன் (இந்த அன்புடன் அந்தரங்கத்தை நிறுத்துங்க மேடம்) - முரளியை வழிமொழிகிறேன், ரமணிச் சந்திரன், சாரு, 


3.கவிஞர்

பிடித்தவர் :  மனுஷ்ய புத்திரன், வாலி, அய்யனார் , ரிஷான், ரமேஷ் பிரேம் 
பிடிக்காதவர் : பா. விஜய்


4.இயக்குனர்

பிடித்தவர் : மணிரத்தினம், வெற்றிமாறன், k . s . ரவிக்குமார் (கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும்), சுந்தர் C  (இயக்குனரா மட்டும்), KB , ருத்ரைய்யா,  மிஷ்கின், அமீர், சசிக்குமார்
பிடிக்காதவர் : பேரரசு, விசு, s . j . சூர்யா, லாரன்ஸ் ராகவேந்தரா


5.நடிகர்

பிடித்தவர் : ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், மணிவண்ணன், சத்யராஜ் , பிரபு தேவா (நடிகரா மட்டும்)
பிடிக்காதவர் : s . j . சூர்யா, சிம்பு (கோவில் படம் தவிர)


6.நடிகை

பிடித்தவர் : ஜோதிகா, பூஜா (ரொம்ப அழகா இருக்காங்க என்னை பொருத்தவரைக்கும்), ராதா,  ஊர்வசி ,  தனிஷா (காஜோல் தங்கச்சிங்க வேற என்ன வேணும் இருந்தாலும் ரொம்பவே அழகான பொண்ணு) , த்ரிஷா , நயன்தாரா
பிடிக்காதவர் : சினேகா, அம்பிகா, சதா, அசின்


7.இசையமைப்பாளர்

பிடித்தவர் : இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான்
பிடிக்காதவர்: ஹாரிஸ் ஜெயராஜ் (ரொம்ப நாளா ஒரே ட்யுன வச்சு ஓட்டிட்டு இருக்காரு) இன்னும் நிறைய பேர் இருக்காங்க


8. பாடகி

பிடித்தவர் :சித்ரா, ஸ்வர்ணலதா
பிடிக்காதவர் :அனுராதா ஸ்ரீராம்


9. தொழிலதிபர்
பிடித்தவர் :எங்க ஊர் முழுக்க தொழில் அதிபர்கள்தான் இதுல யார சொல்றது யார விடறது. அதுனால எல்லாரையும் புடிக்கும் (அப்பாடா தப்பிச்சாச்சு)
பிடிக்காதவர் : சத்யம் கம்ப்யூட்டர்ஸ்


10. சின்னத்திரை நட்சத்திரம்

பிடித்தவர் : பாலாஜி, சின்மயீ
பிடிக்காதவர் : கோபிநாத்,  லட்சுமி (இது கதையல்ல ஜீவன - கன்னடத்துலையும் இந்த அம்மா இதையேதான் பண்ணிட்டு இருக்காங்க ), DD

பின்குறிப்பு : தோணின எல்லாம் எழுதிட்டேன் ஆட்டோ ஏதும் வந்துச்சு டேக் டைவர்சன்-னு சொல்லி முரளி விலாசத்துக்கு அனுப்பிடுவேன் .

விளையாட்டை விளையாட்டாகவே தொடர நான் அழைப்பது

1 . ராஜசேகர் (http://manathilpattavai.blogspot.com/)
2 . முத்து (http://onceinourlife.blogspot.com/)

5 comments:

முரளிகுமார் பத்மநாபன் said...

ஆட்டோ அனுப்புறது இருக்கட்டும், ஆமா திரிஷா நடிச்சி எப்ப பார்த்திங்க? ஏங்க விளையாடறீங்க........

நேசமித்ரன் said...

ரைட்டு ஆட்டோ அனுப்பிர வேண்டியதுதான்

:)

தோழி said...

sneha nadichu mattum eppo patheenga murali (sameebathulathan vera vali illama Pondy padam pathen) athukkku piragum avangala pidichirukkunu ezhuthina enakke naan auto anuppikka vendiyathuthan.

Thrisha enakku pidicha nadigainga athukku avanga nadikkanumndra avasiyam illai. :)

தோழி said...

Mithran - enakku pidicha kavinjargal listla unga per ezuthanumnu nenachen vittu pochu. sorrynga

Cable Sankar said...

ஹலோ.. திரிஷா.. ?????:(((((