Tuesday, April 6, 2010

deyyyyyyyyyyyy அறிவாளிடா நீ

கண்டிப்பா இது ஒரு மொக்கை பதிவுதான், ஆனால் உண்மைச் சம்பவம்.

காலேஜ் முதல் வருஷம் படிக்கும்போது நடந்தது (காலேஜ்-லாம் படிச்சியா நீ-னு யாரும் கேக்கக் கூடாது, நான் படிச்சேன்!!!! - (நானா படிச்சேன் - எங்க அப்பாவோட சதி) ). நான் ஸ்கூல் படிக்கும்போதும் சரி காலேஜ் முதல் செமஸ்டர் வரைக்கும் பிட்/காப்பி அடிச்சதே இல்லை.

இரண்டாவது செமஸ்டர் எக்ஸாம்-கு நல்லாத்தான் படிச்சேன் ஸ்டடி ஹாலிடேஸ்-ல மட்டும். முதல் வருஷம் மட்டும் தமிழ் & இங்கிலீஷ் பேப்பர்-ஸ் இருந்துச்சு. எங்களுக்கு இருந்த இங்கிலீஷ் பேப்பர்-ல என்ன குஷ்டம்னா கண்ட்றாவியான டாபிக்-ல எல்லாம் எவனோ கவிதை எழுதி வெச்சிருந்தான் அதுல முக்கியமானது கழுதை-ய பத்தினது - அது எப்டி இருக்கும், எப்டி நிக்கும், எப்டி கத்தும்னு ! தேவையா எங்களுக்கு .

எங்கள பத்தி எவனோ எழுதினது நாங்க படிக்கணுமான்னு ரோஷப்பட்டு படிக்காம விட்டாச்சு. அதுலயும் எங்க இங்கிலீஷ் மாஸ்டர்-சே வேண்டாம்னு சொல்லி விட்டாங்க. சொல்லிக் குடுத்தாலே நாங்க படிச்சு கிழிப்போம். இதுல அவங்களே வேண்டாம்னு சொல்லிட்டா அந்த கழுதை-ய பத்தி சொல்லவே வேண்டாம்.

எக்ஸாம் ஹால்-கு முன்னாலே அப்போதான் தீவிரமா படிக்கற மாதிரி எப்பவும் போல நடிச்சுட்டு இருந்தோம். திடீர்னு பாத்தா எங்க இங்கிலீஷ் மாஸ்டர்-ஸ் ரெண்டு பேரும் வேகமா வந்திட்டு இருந்தாங்க. ஒரு பெரிய அறிவிப்பு.

என்னான்னா அவங்க நடத்தாம போன அந்த கழுதை கவுஜை மற்றும் அவங்க வேண்டாம்னு  முடிவெடுத்த எல்லா பாடத்துல இருந்தும் கேள்வி வந்திருக்குனாங்க. (எங்களுக்கு பாடம் எடுத்தா அவங்க வெளங்கிடுவைங்களாக்கும் - கேள்வி புரியுது ஆனா நோ கமெண்ட்ஸ்). என்ன பண்றதுன்னு எங்களுக்கு ஒன்னும் புரியலை. மாஸ் கட் தெரியும் மாஸ் பெயில் நடந்தா எப்டி இருக்கும்னு யோசிச்சு பாத்தேன்.

இந்த இடத்துல ஒரு சின்ன flashback - எங்க அப்பா காலேஜ்-ல சேத்தும்போது சொன்ன ரெண்டு கண்டிஷன்- ல ஒண்ணு 60 % மார்க் வாங்கணும் எல்லாம் சுப்ஜெக்ட்-லயும் (இன்னொரு கண்டிஷன் என்னன்னு கேக்கறீங்கள அது வேற மேட்டர் அப்புறம் சொல்றேன்)

இங்கே நிலைமை பெயில்-ஆ போற மாதிரி இருக்கு இதுல எங்கே 60 % மார்க் வாங்கறது. வேர்த்துப் போச்சு. ஆனா எங்க மாஸ்டர்ஸ் ரொம்ப நல்லவங்க. எங்கள அவங்களே பிட் எடுத்துட்டு போகச் சொல்லிட்டாங்க (இது நெஜம்மாவே நடந்துச்சு ). கொஞ்ச நேரம் அந்த வராண்டால பேச்சு சத்தமே இல்லை. வேற ஒரு சத்தம் மட்டும் வந்துச்சு. என்னனு யோசிக்கறீங்களா??   நோட்ஸ் கிழிச்சுட்டு இருந்தோம் (யெஸ் நானும்தான் வேற வழி). ஒரு வழியா பிட் எடுத்துட்டு எக்ஸாம் ஹால் போயாச்சு. அதுக்கு அப்புறம் இன்னும் முக்கியமான சில திருப்பங்கள்.

வாழ்க்கைல முதல் தடவை பிட் அடிக்கறேன் அதுனால முகம் எல்லாம் வேர்த்துப் போய் இருக்கேன். எனக்கு பக்கத்துல ஒரு Bcom  student இருந்தான். அவன் வேற என்னை ஒரு மாதிரி பாத்தான்  (அது எனக்கு ரெண்டு மாதிரி மட்டுமில்லை மூணு மாதிரி கூட தெரிஞ்சது :( ). Question பேப்பர் குடுத்தாங்க.

என்னதான் முதல் தடவைனாலும் வெளிய காட்டிக்காம முதல் பதிலா எனக்கு தெரிஞ்ச ஒரு கேள்விக்கு பதில் எழுதிட்டேன். அடுத்தது அந்த பிட்-ல இருந்த ஒரு பதில் இப்டி ரெண்டு பிட் அடிச்சுட்டேன். இதுல என்ன விஷயம்ன பக்கத்துல இருந்த பய ஒரு மாதிரி முறைச்சு பாத்துட்டே இருந்தான். அய்யோ எங்கேயாவது போட்டு குடுதுட்டான்ன என்ன பண்றது எனக்கு குலை நடுங்கிட்டே இருந்துச்சு. திடீர்னு ஏதோ பேச முயற்சி பண்ணான். எவ்ளோ நேரம்தான் தள்ளி தள்ளி உக்கார முடியும் ஒரு டெஸ்க்-ல.

சரி மானம் போறதுன்னு ஆய்டுச்சு என்னதான் சொல்றான்னு கேக்கலாம்னு என்ன-னு கேட்டா !!!!! "என்கிட்டே நிறைய பிட் இருக்கு உனக்கு வேனுமான்றான் " லூசு லூசு லூசு லூசு (அவனையா என்னையான்னு தெரியலை ஆனாலும் திட்டிட்டே) இல்லை வேணாம் எழுதி முடிச்சுட்டேன் அந்த 10  மார்க் கேள்வி-னு சொல்லிட்டேன்.

இது இப்டி போயிட்டு இருக்கும்போது எங்க இங்கிலீஷ் மாஸ்டர் வேகமா கிளாஸ்-கு வந்தாரு. ஏதோ flying  squad -ஆமே அது வருது. பசங்களா உங்க கிட்டே இருக்கற பிட்-எல்லாம் குடுத்துடுங்க -னாரு. குடுக்கறது பிரச்சினை இல்லை. ஆனா அந்த மாஸ்டர்-கு என் மேல கொஞ்சம் மரியாதை இருந்துச்சு - படிக்கற புள்ளைன்னு (சத்தியமா) நான் எப்டி குடுக்க முடியும். சரி பக்கத்துல இருக்கற புத்திசாலிய கேப்போம்னு அவங்ககிட்டே சொன்னேன். "எங்கே இந்த பிட்-யும் சேத்து குடுத்துட முடியுமான்னு" . (நம்மால ஒருத்தன் கேட்டா பேர் வாங்கறாநேன்னு  கஷ்டமாத்தான் இருந்துச்சு ஆனாலும் வேற வழியில்லை.) "சரி"-னு அவனும் வாங்கிட்டான்.

எங்க டெஸ்க் பக்கத்துல சார் வந்துட்டாரு. என்கிட்டே கேட்டாரு இல்லைன்னு சொல்லிட்டேன் (ஹி ஹி ஹி ஹி) அந்த பையன் கிட்டே கேட்டாரு. என்ன கொடுமைனா அவன் எடுத்தான் எடுத்தான் எடுத்துக்கிட்டே இருந்தான். shoe , பெல்ட், ஷர்ட் காலர், ஷர்ட் கை மடிப்பு, பேன்ட் பாக்கெட்- னு எடுத்துக்கிட்டே இருந்தான். மொத்ததுல அவன் ஒரு புக் முழுக்க எடுத்துட்டு வந்திருந்தான். சரி நம்மால ஒன்னும் இவன் மானம் ஒன்னும் போகலைன்னு ஒரு சந்தோசம்.

ஒரு வழியா எக்ஸாம் முடிச்சேன் எப்பவும் போல எங்க கிளாஸ் பசங்களுக்கு one மார்க் answers சொல்லிட்டு.

இந்த பிட் விசயத்துல ஒரு பெரிய ட்விஸ்ட்-ஏ இதுக்கு அப்புறம்தான். எக்ஸாம்-கு அப்புறம் எல்லார் கிட்டயும் கேட்டுட்டு இருந்தேன் எப்டி எழுதினாங்கனு தேவையே இல்லைதான் - ஏன்னா எல்லாருமே பிட் அடிச்சுதான் எழுதினோம். ஆனாலும் ஒருத்தன் ரொம்ப சோகமா இருந்தான். என்ன கோபி எப்டி எழுதினீங்க எக்ஸாம்-னு கேட்டேன். ரொம்ப கஷ்டம்  அனு-னு சொன்னான். எனக்கு பயங்கர ஷாக். என்னடா இவன் மட்டும் பிட் அடிக்காம எழுதினான்னு. ஏன் கோபி என்ன ஆச்சுன்னு டென்ஷன்-ஓட கேட்டேன்.

ஏன் ஏன் ஏன் எனக்கு மட்டும் பல்பு குடுக்கறதுக்கு மட்டும் இத்தனை பேர் காத்திட்டு   இருக்காங்க. முகத்துல reaction -ஏ இல்லாம சொல்றான். இல்லை அனு நிறைய பிட் எடுத்துட்டு போனதால எந்த பதில் எங்கே இருக்குனு தேடரதுலையே டைம் ஆய்டுச்சு-னு. deyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy யார்ரா அறிவாளி இங்கே. நீயா நானா சத்தியமா நீதாண்டா.

17 comments:

நேசமித்ரன் said...

பல்புக் கடையே வச்சிருக்கீங்களாமே
ஒரு எமர்ஜன்சி பல்பு பார்சல்
அதுக்காக மேண்டில் அனுப்பிச்சிறாதீங்க

:)

தோழி said...

No Only betromax light :(

துபாய் ராஜா said...

//முகத்துல reaction -ஏ இல்லாம சொல்றான். இல்லை அனு நிறைய பிட் எடுத்துட்டு போனதால எந்த பதில் எங்கே இருக்குனு தேடரதுலையே டைம் ஆய்டுச்சு-னு. //

ஹா...ஹா..ஹா. :))

ஜோசப் பால்ராஜ் said...

சூப்பரூ

மங்குனி அமைச்சர் said...

நல்ல காமடி ஸ்டைல்ல எழுதி இருக்கீங்க , நாம கூட அந்த b.com பயபுள்ள மாதிரி தாங்க

தோழி said...

நன்றிங்க துபாய் ராஜா, ஜோசப் பால்ராஜ். மங்குனி அமைச்சர்.

chandru / RVC said...

இதே போல ஒரு சம்பவம் எங்க க்ளாஸ்ல நடந்துச்சு - அதுவும் ஆப்டிக்ஸ் & ஸ்பெக்ட்ரோஸ்கோபி பேப்பர்...! நண்பன் ஒருத்தன் புக் மொத்தத்தையும் மினி ஜெராக்ஸ் போட்டு எடுத்து வச்சுருந்தான். கடைசில சோகமா வெளில வந்தான்... என்னடா மச்சி, என்ன ஆச்சுன்னா - சொன்னான் ஒரு பதில் - மச்சான் எல்லா பக்கத்துலயும் லென்ஸ் படமா இருக்கு - எந்த கேள்விக்கு என்ன பதில்னே தெரியலைன்னு..!

ஸ்ரீவி சிவா said...

வாழ்க்கைன்னு ஒண்ணு இருந்தா, அதுல....

சரி வேணாம்... விட்ருங்க...நீங்களே பல்ப் வாங்குன சோகத்துல இருக்கும் போது, 'கட்டய குடுக்குறது' பாவம். அவ்வ்வ்வ்.

ரசிக்கும்படி மொக்கை போடுறீங்க அனு. :)

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Sen22 said...

Nalla irunthathu...


Senthil,
Bangalore

sathishsangkavi.blogspot.com said...

அழகா சொல்லியிருக்கறீங்க....

உங்க அனுபவம் அழகாக ரசிக்கும் மொக்கை.......

Trails of a Traveler said...

// (நானா படிச்சேன் - எங்க அப்பாவோட சதி)//
இந்த அப்பனுன்களே இப்படித்தான்...

அந்த ரெண்டாவது கண்டிஷன் எனக்கு தெரியுமே...

அன்பேசிவம் said...

:-)
பள்ளி வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா.....

Kannan K said...

nalla mokka

Senthil said...

Idulla edhu unmai illa poiinu theriyaleye. Nambara maadhiri illa

prince said...

அந்த ரெண்டாவது கண்டிஷன் எனக்கும் தெரியுமே... ஹ ஹா அஹா ...பல்பு எரியுது....

Unknown said...

ஒரு எமர்ஜன்சி பல்பு பார்சல்
அதுக்காக மேண்டில் அனுப்பிச்சிறாதீங்க --hahahaha