Tuesday, October 28, 2008

மற்றுமொரு பயணம் - தொடர்ச்சி...

இன்னைக்கு அந்த கதையை முடிச்சிடறேங்க.

இருங்க இருங்க அந்த வெடிகுண்ட தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி, இன்னும் ரெண்டு, மூணு வில்லங்கங்களையும் கேட்டுக்கோங்க. இந்த GPS-னு சொன்னாங்களே அதை கார்ல முன்னால கண்ணாடில நடுவுல ஒட்டணுமாம், இந்த புத்திசாலி அவன் சீட்டுக்கு முன்னாடி அவனுக்கு வசதியா ஒட்டி வச்சிருந்தான். அது ஒரு உலக மகா குத்தமாமாம்.

அடுத்தது நம்ம ஊர்ல எல்லாம் காரை நிறுத்தனவுடனே இறங்கற மாதிரி நான் உடனே இறங்கிட்டேன். உடனே உள்ள இருந்து கத்தினானுங்க இங்க எல்லாம் இறங்கக்கூடாதுன்னு. என்னங்கடா அநியாயம் இது காரை நிறுத்தினா இறங்கறது ஒரு தப்பான்னு டபக்குனு காருக்குள்ள புகுந்துட்டேன்.

கணக்கு பாத்தா இப்பவே வாங்கப்போற டிக்கெட்டுங்களோட எண்ணிக்கை கண்ணைக்கட்டுது.

இப்ப க்ளைமேக்ஸ். அந்த போலீஸ்கார மாமா வந்து ஸ்லோமோஷன்ல சொல்றாரு " தம்பி இந்த காரோட ரெஜிஸ்டிரேஷன் போன வருஷமே முடிஞ்சு போச்சு இந்த கார ரோட்ல ஓட்டினதுக்கே உன்னை உள்ள தள்ளனும் கொஞ்சம் கீழ இறங்கறீங்களா"ன்னு. காரை போலீஸ் ஸ்டேஷன்க்கு எடுத்துட்டு போக வண்டி வந்துட்டு இருக்கு, இறங்கி என் வண்டில ஏறுங்கன்னு ஏதோ பெருசா lift குடுக்கறமாதிரி பெருந்தன்மையா சொல்றாரு.

அடப்பாவிகளா ஒரே ஒரு நாள் வெளிய கூட்டிட்டு போங்கன்னு சொன்னதுக்கு இப்படி போலீஸ் வண்டில ஏத்திட்டீங்களேடா. எங்க குடும்ப கெளரவம் என்ன ஆகறது, எங்க வம்சத்துல யாரும் போலீஸ் வேலைக்கு கூட போனதில்லையே (கிடைச்சதில்லைன்றது வேற விசயம்), நாளைக்கு இந்த விசயம் பேப்பர்ல வந்தா எனக்கு கல்யாணமே நடக்காதே-னு மனசுக்குள்ள புலம்பிட்டு (வாய் விட்டு புலம்பினாலும் கூட வந்த ரெண்டு புண்ணாக்குங்களுக்கும் புரியாதுன்றது மேட்டரு) போலீஸ் கார்ல ஏறி உக்காந்தேன் (படுபாவி போலீஸ்காரன் - இனிமேல அவனுக்கு என்ன மருவாதி - என்னையும் பின்னால சீட்ல உக்கார சொல்லிட்டான், முன்னால சீட்ல ஒரு கெத்தா உக்காந்துட்டு போகலாம்னு நினச்சா. அவன் அப்பன் வீட்டு சொத்தா தேஞ்சு போகுது. என்னவோ போங்க. )

சரி அந்த போலீஸ்காரன் நம்மள வீட்ல விட்டுடுவான்னு நினச்சிட்டு உக்காந்திருந்தா, பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்க்கு கூட்டிட்டு போயிட்டான். இதெல்லாம் விடியக்கால 4 மணிக்கு நடக்குது.

அப்புறம் அந்த போலீஸ் ஸ்டேஷன்க்கு ஒரு டாக்ஸி வரச்சொல்லி வீட்டுக்கு வந்ததுக்குப்புறம் பாத்தா, கன்னா பின்னான்னு டிக்கெட் குடுத்துருக்கான் அதுல முக்கியமா ஒரு டிக்கெட் NO PARKING-ல வண்டியை நிறுத்திப்போட்டம்னு, அது எப்பன்னு யோசிச்சிட்டு இருந்தா, பின்னால சீட்ல தூங்கிட்டு இருந்த விளக்கெண்ணெய் சொல்லுது, போலீஸ் வண்டி பின்னால வந்தப்போ நிறுத்தினம்ல அங்க NO PARKING போர்டு இருந்துச்சாம - அத எப்ப சொல்லுது பாருங்க அது.

1 comment:

லெமூரியன்... said...

\\எங்க குடும்ப கெளரவம் என்ன ஆகறது, எங்க வம்சத்துல யாரும் போலீஸ் வேலைக்கு கூட போனதில்லையே...//

\\(கிடைச்சதில்லைன்றது வேற விசயம்)...//

குறும்பு..! :-)

\\நாளைக்கு இந்த விசயம் பேப்பர்ல வந்தா எனக்கு கல்யாணமே நடக்காதே-னு மனசுக்குள்ள புலம்பிட்டு...//

POINT taken...இனிமே கவலைய விடுங்க ...! :-)